கலா மாஸ்டருடன் நடனமாடி அசிங்கப்பட்ட ஜூலி

கலா மாஸ்டருடன் நடனமாடி அசிங்கப்பட்ட ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்து போலி என்று பெயர் பெற்றவர் ஜூலி. இவர் தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.


பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம் என்று கூறினார். இது கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறியதாக செய்திகள் வெளிவந்தன. இதில் நடன இயக்குநர் கலா மற்றும் கோகுல் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா  மாஸ்டர் ராதை மனதில் பாட்டுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி அசத்தினார். இதனை பார்த்த ஜூலியும் ஆர்வத்தில் அவருடன் போட்டி போட்டு நடனமாடினார். ஆனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனை பார்த்து பார்வையாளர்கள்  சிரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நிலைமையை உணர்ந்த ஜூலி உடனே ஒதுங்கி விட்டார். இதனை டிவியும் ஒளிபரப்ப  மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர்


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.