மலேசியா பற்றிய இந்த உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா?

மலேசியா பற்றிய இந்த உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா?
மலேசியா The Legend (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு.

மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்).

மேற்கு மலேசியாவையும் கிழக்கு மலேசியாவையும் தென்சீனக்கடல் பிரிக்கின்றது. மலேசியாவின் நில எல்லைகள் [9]தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். நடுவண் அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயாவில் உள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். 1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக மிசான் சைனல் அபிடீன் மகுடம் வகிக்கின்றார். மலேசியாவின் பிரதமராக நஜீப் துன் ரசாக் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.


கடந்த 50 ஆண்டுகளாக இதன் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருந்து வருகிறது. வெளிநாடுகள் மிகுதியாக முதலீடுகள் செய்து வருகின்றன. இப்போது சுற்றுலா, அறிவியல், வர்த்தகம் முதலிய துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.