பீர் குடிப்பவர்கள் மட்டும் பார்க்கவும்

பீர் குடிப்பவர்கள் மட்டும் பார்க்கவும்
பியர் அல்லது பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும். தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாப்பொருளை நொதிக்கவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. தேவையான மாப்பொருள் பொதுவாக பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது எனினும் கோதுமை, சோளம், அரிசி போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது
கூடுதலான பியர் வகைகள் ஒப் தாவரத்தின் பூக்களை சுவையூட்டிகளாக பயன்படுத்துகின்றன.
ஒப் பூக்கள் பியருக்கு அதன் கைப்புச் சுவையைக் கொடுப்பதோடு காப்புப்பொருளாகவும் செயற்படுகின்றன
ஒப் பூக்களை விடுத்து பச்சிலை, பழங்கள் போன்றவையும் சில வகை பியர்களில் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. திராட்சையிலிருந்து பெறப்படும் வைன், தேனிலிருந்து பெறப்படும் மெட் போன்ற மாப்பொருளற்றவற்றை நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் மதுபானங்கள் பியராக கருதப்படுவதில்லை.

மனித வரலாற்றின் மிகப்பழைய எழுத்தெச்சங்கள் பியர் தயாரிப்பு, விநியோகம் தொடர்பான குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன:அம்முராபி நெறியில் பியர், பியர் விற்பனை நிலையங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் காணப்படுகின்றனமேலும் சுமேரிய பியர் கடவுளான நின்கசி மீதான தேவாரம் கடவுள் வாழ்த்தாகவும் பியர் தயாரிப்பு முறையை மனனம் செய்துவைக்கும் முறைமையாகவும் பயன்பட்டது.
  இன்று, பியர் வடிக்கும் கைத்தொழில் சில முன்னணி பன்னாட்டு நிறுவனங்களையும் பல ஆயிரக்கணக்கிலான சிறிய நிறுவனங்களையும் கொண்ட உலகலாவிய வணிகமாகும்.


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.