பழைய பகையை மறந்து விஜய் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?- வீடியோ

பழைய பகையை மறந்து விஜய் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?- வீடியோ
பழைய பகையை மறந்து விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் .ஆர். முருகதாஸ் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். மெர்சல் ஹிட் படத்தை அடுத்து முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் விஜய். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லைமுருகதாஸ், விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தை தற்காலிகமாக விஜய் 62 என்கிறார்கள்.
இந்த படத்தின் நாயகி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளதுவிஜய் 62 படத்தில் தளபதிக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என்றும், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இரண்டு ஹீரோயின்களுமே முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே நடித்தவர்கள். விஜய் 62 படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கோ, சோனாக்ஷியோ அல்ல மாறாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை

கஜினி படத்தில் நடித்தபோது தனது கதாபாத்திரத்திற்கு முருகதாஸ் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கோபம் நயன்தாராவுக்கு உண்டு. அந்த பகையை மறந்துவிட்டு நயன்தாரா நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.