படுக்கையில் சிறுநீர் கழித்தல்


இந்தப் பிரச்சினையைச் சய்யா மூத்திரம் அல்லது bed wetting என்று கூறுவார்கள். இது தன்னிச்சை செயல். 5 முதல் 8 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இது வரும். பகலிலும் இரவிலும் இப்படி ஏற்படலாம். பொதுவாக இரவில் தூங்கும்போது குழந்தைகள் அறியாமல் சிறுநீர் போவதைத்தான் bed wetting என்று சொல்வார்கள். இந்த நோயை nocturnal enuresis என்றும் கூறுவார்கள். இது சாதாரணமானதுதான்.
7, 8 வயதுவரைகூடக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவதைப் பார்த்திருக்கிறேன். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், மூத்திரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாததாலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இப்படி ஏற்படும்.
இதனால் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். Self esteem எனப்படும் தன்னம்பிக்கை குறையலாம். குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்படி பெற்றோர்கள் பேச வேண்டும். இது சாதாரண விஷயம்தான். இது மாறிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும். இரவு உறங்கும் முன் அவர்களை வற்புறுத்திச் சிறுநீர் போகச் செய்ய வேண்டும்.
இரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதைக் குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும். சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்தச் செயல்முறை நடைமுறையில் பலனளிக்கச் சற்று நாளாகும்.
குழந்தைக்கு மனஉளைச்சல் வராமல் பாதுகாக்க வேண்டும். மூத்திரப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சில நேரம் இதற்கென்று மருந்து கள் தேவைப்படுகின்றன. அபான வாயுவின் ஜலக் குணம் அதிகரித்து, மூத்திரத்துடன் சேர்ந்து தன்னிச்சையாக மூத்திரம் வெளியேறலாம்.
குணமடைய
இப்படிப்பட்டவர்களுக்கு நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது. வஸ்தி ஆமய அந்தக கிருதம் என்னும் நெய்யை இரவு உறங்கும் முன் 1 ஸ்பூன் கொடுக்கலாம். தர்ப்பைப்புல் கஷாயம் சிறந்த கைமருந்து. தாமரை சூர்ணம், அரசம்பட்டை சூர்ணம் இரண்டையும் 5 கிராம் தேனில் கலந்து கொடுக்கலாம்.

இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். நரம்புகளை வலுவாக்க அஸ்வகந்தாதி சூர்ணம் 3 அல்லது 5 கிராம் பாலில் கலந்து கொடுக்கலாம். தலைக்கு லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். நாள்பட இது குணமாகி விடும். அதன் பிறகும் மனதில் கூச்ச உணர்வு அதிகமாக இருந்தால் வல்லாரை நெய் அல்லது கல்யாணகம் நெய் கொடுக்கலாம்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.