அதிக கோபப்படுபவரா நீங்கள்? இந்த பழம் சாப்பிட்டால் போதும்
அதிக கோபப்படுபவரா
நீங்கள்? இந்த பழம் சாப்பிட்டால் போதும்
கோபம்
(Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல்
அளவில் இருந்து கடுமையான வெறி
கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில்
அதிக இரத்த அழுத்தம் வேகமான
இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலின் நோரட்ரினலின்
அதிகம் சுரக்கலாம். யூ.ஸி. இர்வின்னை
சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து
இது சம்மந்தமாக மிகுதியான இலக்கியங்களை அளித்து உள்ளார், அவர்
கோபத்தை மூன்று விதமாக வகைப்படுத்தி
உள்ளார்: அறிவை பாதிக்க கூடியது,
உடலை பாதிக்ககூடியது, நடத்தையை பாதிக்கக்கூடியது. வில்லியம் டிஃபூர் எனும் கோப
மேலாண்மை எழுத்தாளர், கோபத்தை உயர் அழுத்த
சமையல் பாத்திரம் அதாவது அழுத்தச் சமையற்கலனுடன்
(பிரஷர் குக்கர்) ஒப்பிடுகிறார்: நமது கோபத்தின் மீது
நாம் அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் அது வெடிக்கும்
வரையே.
கோபம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு
உணர்ச்சியாக நம் அறிவிலும், உடலிலும்,
நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. ஒரு மனிதன் தன்னை
அச்சுறுத்தும் வேறு ஒரு வெளி
சக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவே மூளையின் தேர்வான
கோபம். கோபத்தின் வெளிப்பாடுகளை முக பாவனைகள், உடல்
மொழி, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் கண்டறியலாம். மனிதர்களோ, மிருகங்களோ கோபத்தின் வெளிப்பாடுகளாக மிகுந்த சப்தம் எழுப்புவது,
உடலை பெரிதாக்க முயற்சிப்பது, பற்களை காட்டுவது, முறைப்பது
முதலியவற்றை தங்கள் எதிரிகளின் அச்சுறுத்தலை
நிறுத்த தரும் ஒரு எச்சரிக்கையாகும்.
நவீன உளவியலாளர்கள் கோபம் என்பது முதன்மையான,
இயற்கையான, முதிர்ந்ததான, அனைத்து மனிதனுக்கும் ஏற்படும்
தொடர்ந்து வாழ்தலுக்கான் ஒரு அனுபவமாக கருதப்படுகிறது.
கோபம் ஒரு மனிதனின் நடவடிக்கையை
திருத்த உளவியல் வளங்களை திரட்டும்;
ஆனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு
மனிதனின் தனிப்பட்ட அல்லது சமூக நலனில்
எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பல ஞானிகள் கோபத்தின்
விளைவுகளை பற்றி எச்சரித்தாலும் கோபத்தின்
உள்ளார்ந்த மதிப்பின் மீது பல வேற்றுமைகள்
இருந்த வண்ணமே உள்ளது. கோபத்தை
கட்டுபடுத்தும் வழிமுறைகளை வழங்கிய ஞானிகள் அதனால்
எற்படும் தீய விளைவுகளையும் எடுத்து
கூறியுள்ளனர்.





கருத்துகள் இல்லை: