கனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!
கனவு நிறைவேறிடுச்சு...
இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!- வீடியோ
விஜய் டி.வி-யில்
ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில்
கலந்துகொண்டு தனது இனிமையான குரல்
வளத்தால் வெற்றி பெற்றவர் பிரியங்கா.
பல் மருத்துவம் படித்துவரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக
வேண்டும் என்பது தான் கனவு.
பிரியங்காவின் கனவு இப்போது நிறைவேறிக்
கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி
வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில்
பாட ஆரம்பித்தார்.
இயக்குனர்
பாலாவின் கண்ணில் பட்டு சினிமாவிலும்
பாடகியானார். 'அவன் இவன்' படத்தில்
'ஒரு மலையோரம்...' என்ற பாடலை விஜய்
யேசுதாசுடன் இணைந்து பாடினார் பிரியங்கா.





கருத்துகள் இல்லை: