என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாக பேசப்படும்னு நினைக்கவே இல்லை: அமலா பால்- வீடியோ
என் தொப்புள் இவ்வளவு
பெரிய விஷயமாக பேசப்படும்னு நினைக்கவே இல்லை: அமலா பால்- வீடியோ
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும்
என்று நான் நினைக்கவே இல்லை
என்று நடிகை அமலா பால்
தெரிவித்துள்ளார். சுசி கணேசன் இயக்கத்தில்
பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா
பால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருட்டுப் பயலே
2. அந்த படத்தின் போஸ்டரில் அமலா பால் தொப்புள்
தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார்.
ஒரு படம் நமக்கு என்று
இருந்தால் அது நம்மை தேடி
வருவது விதி. திருட்டுப் பயலே
2 படத்திற்கு என்னால் நோ சொல்ல
முடியாது. கதை, கதாபாத்திரம் எனக்கு
மிகவும் பிடித்திருந்தது.
சுசி கணேசன் இயக்கத்தில் நடித்ததில்
மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நான்
வித்தியாசமாக நடித்துள்ளேன்.
என் தொப்புள் இவ்வளவு
பெரிய விஷயமாகும் என்று நான் நினைக்கவே
இல்லை. நாம்
2017ம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும்
என் தொப்புள் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
நான் ஒரு நடிகையாகவும், மனுஷியாகவும்
நிறைய வளர்ந்துவிட்டேன். காதலை
பற்றிய என் கருத்து மாறிவிட்டது.
திருட்டுப் பயலே 2 படத்தில் நான்
துணிச்சலான, தன்னம்பிக்கையான பெண்ணாக நடித்துள்ளேன். பாபி,
பிரசன்னா எனக்கு ஆதரவாக இருந்தனர்
என்றார் அமலா பால்.





கருத்துகள் இல்லை: