நமீதா வீரேந்திர சௌத்ரி திருமண வரவேற்பு நிகழ்வுகள்

நமீதா வீரேந்திர சௌத்ரி திருமண வரவேற்பு நிகழ்வுகள்
நமிதா (பிறப்பு. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.

நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே 10 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார்.

தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர் ஆகும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.