நவம்பர் 24-ல் 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
இந்தியா
மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான
முதல் டெஸ்ட் போட்டி மழையுடன்
ஆரம்பித்தாலும் கடைசி நாள் விறுவிறுப்பாக
இருந்தது. இந்த போட்டியில் இந்திய
அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால் இந்த போட்டி டிராவில்
முடிந்தது.
இந்த நிலையில் இலங்கையுடனான
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய
அணியில், தமிழக வீரர் விஜய்
சங்கர் இடம் பிடித்துள்ளார் என
இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நாக்பூரில் வரும் 24ம் தேதி
முதல் 28-ம் தேதி வரை
2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய
அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள்
அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம்
தற்போது அறிவித்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி (கேப்டன்),
கே.எல்.ராகுல், எம்.விஜய், செதேஷ்வர் புஜாரா,
அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்),
ரோகித் சர்மா, விருத்திமான் சஹா
(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திரா ஜடேஜா, குல்தீப் யாதவ்,
மொகமது ஷமி, உமேஷ் யாதவ்,
இஷாந்த் சர்மா மற்றும் விஜய்
சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு
அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக
பொறுப்பு வகித்த ஆல் ரவுண்டர்
விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை: