சனி பெயர்ச்சியும் இயற்கை பேரழிவும்
சனி பெயர்ச்சியும்
இயற்கை பேரழிவும்
சூரியனின்
மனைவியான உஷா தேவி, சூரியனுடைய
வெப்பம் தாங்காமல் தன்னுடைய நிழலை சாயா என்ற
பெண்ணாக தன்னுருவில் மாற்றிவிடுகிறார். பின் அங்கிருந்து சென்று
தவத்தினை மேற்கொள்கிறார். சூரியன் சாயாவை தன்னுடைய
மனைவி உஷா என்று எண்ணி
வாழ்கிறார். இவர்களுக்கு கிருதவர்மா (சனி) என்ற ஆண்மகனும்,
தபதி என்ற பெண்மகவும் பிறக்கின்றார்கள்.
நிழலை தாயாக கொண்டமையினால் சனி
கருமை நிறத்தில் இருக்கிறார். அதனால் சூரியன் தன்னுடைய
பிற குழந்தைகளான யமனிடமும், யமுனா தேவியிடமும் மட்டும்
அன்பாக இருக்கிறார்.
தந்தையின்
அன்புக்காக ஏங்கும் சனி, தான்
வளர்ந்த பின்பு சூரியனை எதிரியாக
நினைக்கிறார். இதனால் காசிக்கு சென்று
சிவபெருமானை நோக்கி தவமிருந்து. நவக்கிரகங்களில்
ஒன்றாகவும், தன் பார்வை பட்டால்
பிற கிரகங்கள் வலிமை இழக்க வேண்டுமென்றும்
வரம் வாங்குகின்றார். ஈஸ்வரனுக்கு அடுத்த நிலை கோரியதால்,
ஈஸ்வரப் பட்டமும் கிடைக்கிறது. சனி சனீஸ்வரன் என்று
அழைக்கப்படுகிறார். இவருக்கு நீளா தேவி, மந்தா
தேவி என்ற இரு மனைவிமார்கள்
உள்ளனர்.
சிவபெருமான்
அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனீசுவரனிடம்
பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர்
இவருக்கு கொடுத்த துன்பங்களும் என
பல்வேறு புராண, நாடோடிக் கதைகள்
உள்ளன.





கருத்துகள் இல்லை: