பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்களா?: சன்னி லியோன் பரபர பேட்டி
பட வாய்ப்புக்காக
படுக்கைக்கு அழைக்கிறார்களா?: சன்னி லியோன் பரபர பேட்டி
மும்பை:
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன்
மனம் திறந்துள்ளார்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது
என்று நடிகர்கள் ரன்வீர் சிங், ஆயுஷ்மான்
குரானா, நடிகை கல்கி கொச்லின்
உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
இது குறித்து நடிகை சன்னி லியோன்
கூறியிருப்பதாவது,
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் இருக்கிறதா
என்று கேட்டால் ஆமாம் என்று தான்
நான் கூறுவேன். பெண்கள் மட்டும் இல்லை
ஆண்களையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
படுக்கைக்கு
அழைப்பது குறித்து அதிகமானோர் வெளிப்படையாக பேசினால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். எனக்கு
இளம் தலைமுறையினர் அதிலும் பெண்கள் மீது
அதிக நம்பிக்கை உள்ளது. பாலிவுட்டில் படுக்கைக்கு
அழைக்கும் பழக்கம் இல்லாமல் போகும்
நாள் வரும்.
ஆணாதிக்கம்
மிக்க திரையுலகில் நான் தாக்குப்பிடிக்க காரணம்
என் தைரியம் தான். எனக்கு
பயம் கிடையாது. எந்த வாய்ப்பாக இருந்தாலும்
பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் தைரியம்
உள்ளது என்றார் சன்னி லியோன்.
சல்மான்
கானின் தம்பி அர்பாஸ் கானுடன்
சேர்ந்து சன்னி நடித்துள்ள தேரா
இந்தஸார் படம் அடுத்த வாரம்
ரிலீஸாகிறது. இந்த படத்தை அர்பாஸ்,
சன்னி ஆகியோர் பிக் பாஸ்
வீட்டிற்கு சென்று விளம்பரம் செய்தனர்.






கருத்துகள் இல்லை: