டிஎஸ்கே டீஸரை வைத்து மெர்சல், விவேகம் ரெக்கார்டை முறியடிக்கிறோம்: சூர்யா ரசிகர்கள் முடிவு- வீடியோ
தானா சேர்ந்த கூட்டம் படத்தின்
டீஸர் வரும் 30ம் தேதி
ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சூர்யா
ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை. விக்னேஷ்
சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்
உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தானா சேர்ந்த
கூட்டம். இந்த படத்தின் அப்டேட்டை
விக்கியிடம் கேட்டு கேட்டே சூர்யா
ரசிகர்கள் ஓய்ந்துவிட்டனர். சூர்யா ரசிகர்களின் நிலையை
பார்த்து விஜய், அஜீத் ரசிகர்களும்
பரிதாபப்பட்டனர்.
தானா சேர்ந்த கூட்டம்
படத்தின் டீஸர் எப்ப வரும்
என்று கேட்டு கேட்டு சூர்யா
ரசிகர்களுக்கு வாய் வலித்துவிட்டது. கெஞ்சினார்கள்,
மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள், திட்டினார்கள்
ஆனால் விக்கி மசியவே இல்லை.
அதன் பிறகு அவராக
முன் வந்து டீஸர் வரும்
30ம் தேதி வெளியிடப்படும் என்றார். தானா
சேர்ந்த கூட்டம் டீஸர் வரும்
30ம் தேதி வெளியாகும் என்று
அறிவித்த விக்கியிடம் மீம்ஸ் போட்டதற்காக சூர்யா
ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். மெர்சல்,
விவேகம் யூடியூப் சாதனைகளை எல்லாம் தானா சேர்ந்த
கூட்டம் டீஸர் முறியடிக்கும் என்று
நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.





கருத்துகள் இல்லை: