தொழில்நுட்பம் 24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி7



சீன தயாரிப்பு நிறுவனமான விவோ, தற்போது அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான வி7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 20ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 18:9 முழு காட்சி கொண்ட விவோ வி7 செல்ஃபி போகஸ்டு ஸ்மார்ட்போன், இந்தோனேஷியாவில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளது, மேலும் தற்போது இந்தோனேஷியாவில் கிடைக்கும் என்றும் நிறவனம் தெரிவித்துள்ளது
. இந்தோனேஷியாவில் இதன் விலை IDR 3,799,000 (சுமார் ரூ.18,300) விலை ஆகும். இதே விலையில் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் மேட்டி பிளாக் வண்ண வகைகளில் கிடைக்கும்.

டூயல் சிம் ஆதரவு கொண்ட விவோ வி7 ஸ்மார்ட்போனில் Funtouch OS 3.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. விவோ வி7 ஸ்மார்ட்போனில் 720x1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.70 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 1.8GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.


இதில் மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. விவோ வி7 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சாஃப்ட் 'மூன்லைட் க்ளோ' செல்ஃபி லைட், f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 24 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.