ஒரு பாட்டில் பெட்ரோலால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன பிச்சைக்காரர்.. காரணம் அன்பு!- வீடியோ
ஒரு பாட்டில் பெட்ரோலால்
ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன பிச்சைக்காரர்.. காரணம் அன்பு!- வீடியோ
அமெரிக்காவை
சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரர்
ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய்
நிதி திரட்டி கொடுத்து இருக்கிறார்.
அந்தப் பிச்சைக்காரர் அதற்கு முன்பு அந்த
பெண்ணுக்கு மிக முக்கியமான உதவி
ஒன்றை செய்து இருக்கிறார்.
அந்தப்
பிச்சைக்காரர் செய்த உதவிக்கு கைமாறாக
அவருக்கு இப்போது அந்த பெண்
ஒரு கோடி உதவி செய்ததுள்ளதாக
கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி
உலகம் முழுக்கு பரவி ஒரே நாளில்
அந்த பெண்ணும், அந்தப் 'பணக்கார' பிச்சைக்காரரும்
வைரல் ஆகி உள்ளனர்.
அந்த பெண் தனக்கு பிச்சைக்காரர்
செய்த உதவி குறித்து பல
இடங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
நேற்றுவரை ஒருவேளை உணவுகூட இல்லாமல்
இருந்த அந்த பிச்சைக்காரர் இன்று
கோடீஸ்வரர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின்
நியூயார்க் பகுதியை சேர்ந்த 'கேட்
மெக்லூர்' என்ற பெண் சரியாக
ஒரு மாதத்திற்கு முன் நெடுஞ்சாலை ஒன்றில்
கார் பெட்ரோல் இல்லாமல் நின்று இருக்கிறார். வீட்டில்
பணத்தை மறந்து வைத்துவிட்டதால் பெட்ரோல்
போட வழி இல்லாமல் முழித்து
இருக்கிறார். அப்போது அங்கு இருந்த
பிச்சைக்காரர் ஒருவர் தன்னிடம் இருந்த
பணத்தைக் கொண்டு அந்த பெண்ணுக்கு
கொஞ்சம் பெட்ரோல் வாங்கி கொடுத்து உதவி
உள்ளார்.





கருத்துகள் இல்லை: