செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபரை கோபத்தில் மிதித்த யானை (வீடியோ)
செல்ஃபி எடுக்க
முயன்ற வாலிபரை கோபத்தில் மிதித்த யானை (வீடியோ)
மேற்க வங்க மாநிலத்தில் செல்ஃபி
எடுக்க முயன்ற சுற்றுலா பயணி
ஒருவரை யானை ஒன்று மிதித்து
கொன்ற வீடியோ வைரலாக பரவி
வருகிறது.
மேற்கு
வங்க மாநிலத்தில் சுற்றுலா தளமாக விளங்கும் ஜல்பாய்க்
கிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்
வந்து செல்வது வழக்கம். அந்த
பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம்.
எனவே வனத்துறை சுற்றுலா பயணிகளை எச்சரிக்கையுடன் செல்லும்
படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சாதிக் ரஹ்மான் என்ற
இளைஞர், காரில் சென்று கொண்டிருந்தபோது
அவ்வழியே யானை ஒன்று சென்றது.
காரில்
இருந்து இறங்கிய சாதிக், யானைக்கு
முன்னால் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
இதைக் கண்ட யானை வேகமாக
ஓடிவந்து சாதிக்கை தாக்கியுள்ளது. தப்பியோட முயன்ற சாதிக்கை காலால்
மிதித்தது.
இதில் சாதிக் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை படம்பிடித்த நபர் சமூக வலைத்தளங்களில்
பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது
வைரலாக பரவி வருகிறது.





கருத்துகள் இல்லை: