உங்கள் கையில் இந்த H ரேகை இருக்கா பாருங்க
உங்கள் கையில்
இந்த H ரேகை இருக்கா பாருங்க
கைரேகை
சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது
கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும்,
குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு
அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும். இது
பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாகங்களிலும்
காணப்படுகிறது. இவ்வாறு குறிசொல்லும் பழக்கமுடையவர்கள்
பொதுவாக கைரேகை ஜோதிடர்கள், கைரேகை
படிப்பவர்கள் அல்லது குறிசொல்பவர்கள் என்று
அழைக்கப்படுகிறார்கள்.
கை ரேகை கலையை ஆங்கிலத்தில்
“Palmistry” (பாமிஸ்டிரி) என அழைக்கிறார்கள். “Palmistry” என்னும் வார்த்தையில் Palm, Mastery என இரண்டு
சொற்கள் இணைந்துள்ளன. Palm என்றால் உள்ளங்கை எனப்பொருள்படும்.
Mastery என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே
Palmistry என்றால் உள்ளங்கை பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.
கை ரேகை கலையை ஆங்கிலத்தில்
வேறு ஒரு வார்த்தையிலும் குறிப்பிடுகிறார்கள்.
Cheirosophy (கீரோஸபி) என்பது அந்த வார்த்தையாகும்.
அதில் Cheiro, Sophy என இரண்டு சொற்கள்
இணைந்துள்ளன. Cheiro என்றால் கை எனப்பொருள்படும்.
Sophy என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே
Cheirosophy என்றால் கையைப்பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.
கை ரேகை கலையை சமஸ்கிருதத்தில்
"ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக்குறிப்பிடுகிறார்கள்."ஹஸ்தம்" என்றால் கை என்று
பொருள்."ரேகா" என்றால் "கோடு" என்று பொருள்."சாஸ்திரம்"
என்றால் "அறிவியல்" என்று பொருள்.எனவே
"ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால்
கையிலுள்ள கோடுகளைப்பற்றிய அறிவியல் எனப்பொருள்படும்.





கருத்துகள் இல்லை: