பிரமிடுகளில் புதைந்திருக்கும் விடை தெரியாத மர்மங்கள்
பிரமிடுகளில் புதைந்திருக்கும்
விடை தெரியாத மர்மங்கள்
இந்த கட்டுரை பட்டைக்கூம்பு-வடிவ
கட்டிடங்கள் பற்றியது. இதே பெயருடைய வடிவவியல்
கலைச்சொல் குறித்து, காண்க பட்டைக்கூம்பு.
காஃப்ரேயின்
பிரமிடு
கிசா நெக்ரோபொலிசில் அமைந்துள்ள எகிப்திய பிரமிடுகளின் வானிலிருந்தான காட்சி
நிலவு பிரமிடு, டியோடியூகான்
பிரசாத்
தோம் கோவில் , கோ கெர்
குயிமாரின்
பிரமிடுகள், டெனெரைஃப் (எசுப்பானியா)
மட்காசென்
அரசரின் கல்லறை கூம்புவடிவ பிரமிடுகள்,
தொன்மை அல்சீரியா (நுமிடியா)
பிரமிடு
(pyramid, கிரேக்க மொழி: πυραμίς pyramis[1])என்பது பட்டைக்கூம்பு வடிவில்
அமைந்த ஒரு கட்டிட அமைப்பு
ஆகும். இதன் அடி பெரும்பாலும்
சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப்
பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம்.
இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில்
அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில்
அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால
நாகரிக மக்கள் உறுதியான நினைவுச்
சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின்
மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர்
நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும்,
பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய
அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக
அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின்
பெரிய பிரமிடு மட்டுமே.
இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு
கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம்
எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500 lb) இலிருந்து 15 tonnes (33,000 lb)
வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா
நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின்
ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230 மீ (755 அடி) நீளமுடையதாக
உள்ளது.
இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5 மீ (488 அடி)யாக இருந்தது. ஆனால்
உச்சியில் இருந்த வெண்ணிற துரா
சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம்
137 மீ (455 அடி)யாக உள்ளது.
இருப்பினும் இதுவே மிக உயரமான
பிரமிடாக விளங்குகிறது.





கருத்துகள் இல்லை: