1000 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை
திருமால்
என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற்
கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன்,
பெருமாள், வாசுதேவன் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின்
முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால்
அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய
குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன்,
பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு,
சக்கரம், வில், வாள், கதாயுதம்
என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.[1] இவருடைய வாகனமாக கருடனும்,
அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில்
சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே
இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற
வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற
கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார்.
மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில்
செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா
படைக்கும் தொழில் செய்பவர்.[2] சிவபெருமான்
அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன்
இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும்
அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை
எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய
ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக
வணங்கப்படுகின்றது.





கருத்துகள் இல்லை: