நாப்கின் Size பற்றிய திடுக்கிடும் உண்மைகள்!

நாப்கின் Size பற்றிய திடுக்கிடும் உண்மைகள்! 
விடாய்க்கால அணையாடை (sanitary napkin), மாதவிடாய் அடிக்குட்டை, மூட்டுத்துணி, விடாய்க்கால அடிப்பட்டை (sanitary pad), அல்லது பட்டை (pad) எனப் பலவாறாக வழங்கப்படும் உறிஞ்சுகின்றத் தன்மை கொண்ட இவ்வாடையை பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில்் வெளியேறும் உதிரத்தால் ஆடைகள் கறைபடாதிருக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் யோனி சீராக்க அறுவை, குழந்தைப் பிறப்பிற்குப் பிந்தைய குருதிப்போக்கு (lochia), கருக்கலைப்பு காலங்களிலும் பெண்ணின் யோனியிலிருந்து குருதிப் போக்கு நிகழக்கூடிய பிற நேரங்களிலும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப் போக்குக்கான கூடிய உறுஞ்சும் தன்மை கொண்ட சிறுநீர் அடிக்குட்டைகளிலிருந்து இவை மாறுபட்டவை. சிறுநீர் அடிக்குட்டைகள் கட்டுப்பாடிழந்த அல்லது தகைவுவிளை சிறுநீர்ப் போக்கினை உடைய ஆண் பெண் இருபாலராலும் அணியப்படுகின்றன.

வளர்ந்து வரும் அறிவியல் அறிவினையொட்டி இவற்றின் தன்மையிலும் வடிவமைப்பிலும் பல முன்னேற்றங்கள் காணப்படினும் உலகின் நாகரிகம் எட்டா பெரும்பகுதிகளில் பெண்கள் தூய்மை குறைந்த துணித்துண்டுகளையே பயன்படுத்துகின்றனர். பழைய துணிகள், மண், மற்றும் சேற்றைப் பயன்படுத்துவதும் உண்டு. இவற்றின் தூய்மைக்குறைவினால் பலவகை நோய்களுக்கு ஆளாகின்றனர்


பொருளாதார நலிவடைந்த பெண்களால் வாங்கவியலாத நிலையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தும் வண்ணமும் தீர்வு காண்கின்றனர். இத்தகைய பெண்களின் பயனிற்காக மலிவு விலைத் தீர்வாக தமிழ்நாட்டின் கோவையின் ஊரகப்பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் ஓர் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இதன்மூலம் வழக்கமான தயாரிப்புச் செலவைவிட மூன்றில் ஒருபங்குச் செலவில் இவ்வாடைகளைத் தயாரிக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.