அண்டார்டிகாவின் 6 வினோத கண்டுபிடிப்புகள்

அந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா (Antarctica) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது.
 இது ஆண்டு மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலம் ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது.
இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.
அண்டார்டிக்கா என்ற பெயர் ஒரு கிரேக்க கூட்டுச் சொல் ஆகும். இதன் பொருள்   "ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான", "வடக்கிற்கு எதிரிடையாக" என்பது ஆகும்.


அரிசுட்டாட்டில் தனது நூலான மீட்டியரோலாஜியில் அன்டார்டிகா பற்றி கி.மு 350 இல் எழுதியுள்ளார்.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்பட்ட உலக வரைபடத்தில் டயர் மரின்ஸ் இந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ரோமானிய எழுத்தாளர்களான ஹைஜினஸ் மற்றும் அபூலியஸ் (கி,பி,1-2 நூற்றாண்டுகள் ) தென் துருவத்தை ரோமானிய கிரேக்க பெயரான பொலஸ் அண்டார்டிக்கஸ், என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.