கல்யாணத்திற்கு சென்ற இடத்தில் சமையல்காரரை ஹீரோவாக்கிய ஜோக்கர் இயக்குனர்- வீடியோ
கல்யாணத்திற்கு
சென்ற இடத்தில் சமையல்காரரை ஹீரோவாக்கிய ஜோக்கர் இயக்குனர்- வீடியோ
திருமண
நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சமையல்
கலைஞரை பார்த்த இயக்குனர் ராஜு
முருகன் அவரையே தனது படத்தின்
ஹீரோவாக்கிவிட்டார். ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்' என்ற பட நிறுவனம்
பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குனர்
ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.
திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக
இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர்
பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச்
சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் நாயகி
ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன்.
கேமரா- மாநகரம் செல்வம். ஆர்ட்
டைரக்ஷன்- சதீஷ். ஸ்டண்ட்
- பில்லா ஜெகன். இந்த படத்தின்
தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள்
பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இன்று காலை ஏவிஎம்
ஸ்டூடியோவில் நடைபெற்ற படத்துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர்,
ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும்
பலர் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்து வாழ்த்தினர்.





கருத்துகள் இல்லை: