ஒரு தடவை கடலை பார்க்கணும்.. சாகப் போகும் பெண்ணின் கடைசி ஆசை- வீடியோ
ஒரு தடவை கடலை
பார்க்கணும்.. சாகப் போகும் பெண்ணின் கடைசி ஆசை- வீடியோ
இறப்பதற்கு
முன்பு கடைசியாக ஒருமுறை கடலை பார்க்க
வேண்டும் என்று தெரிவித்த பெண்ணின்
கடைசி ஆசையை ஆஸ்திரேலிய மருத்துவமனை
நிர்வாகம் ஒன்று வித்தியாசமாக நிறைவேற்றி
வைத்து இருக்கிறது. பல நாட்களாக அவர்
கேட்டுக் கொண்டு இருந்த இந்த
கோரிக்கையை அந்த மருத்துவமனை சர்ப்ரைசாக
நிறைவேற்றி இருக்கிறது. மேலும் இது குறித்து
அந்த மருத்துவமனை நிர்வாகம் பேஸ்புக் புக் போஸ்ட் ஒன்றும்
போட்டு இருக்கிறது. அவர்களின் இந்த பேஸ்புக் போஸ்ட்டும்
அதில் அவர்கள் வெளிட்டு இருக்கும்
புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது.
பலரும் அந்த மருத்துவமனையை பாராட்டி
வருகின்றனர்.
சிட்னியில்
இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில
நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில்
அந்த பெண் சிகிச்சை பெற்று
வந்தார். அந்த மருத்துவமனை நிர்வாகம்
அவர் எப்போது வேண்டுமானாலும் மரணம்
அடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அந்தப்
பெண் கடைசியாக ஒருமுறை கடலை பார்க்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்து
இருக்கிறார். ஆனால் அந்த உடல்
நிலையோடு கடலை பார்க்க அழைத்து
செல்ல முடியாது என்று கூறியிருக்கின்றனர்.





கருத்துகள் இல்லை: