"அந்த சீன்ல நடிக்கும்போது அவர் கை நடுங்க ஆரம்பிச்சிடும்" - அமலாபால்- வீடியோ
அமலா பால், பாபி சிம்ஹா,
பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் படம்
'திருட்டு பயலே 2'. சுசி கணேசன் இயக்கத்தில்
உருவான இந்தப் படத்தின் ட்ரெய்லர்
சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சுசி
கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால்,
மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம்
ஆண்டு வெளியான படம் 'திருட்டு
பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை
உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன்
இரண்டாம் பாகமான 'திருட்டு பயலே
-2' படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா,
அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால்
நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை
எனச் சொல்லப்படுகிறது. இந்தப்
படத்தில் பாபி சிம்ஹா போலீசாக
நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா அடுத்தவர்கள்
பேசுவதை ஒட்டுக் கேட்பதாகவும், அதன்மூலம்
அவர்களிடம் மிரட்டி பணம் சம்பாதிப்பதாகவும்
கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில
ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வைரலாகப்
பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட
பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ
பேசுவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதே மாதிரியான
காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.





கருத்துகள் இல்லை: