துபாய் பற்றிய இந்த உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா?
துபாய்
பற்றிய இந்த உண்மைகள்! உங்களுக்கு
தெரியுமா?
துபாய்
அல்லது துபை (Dubai, அரபு மொழி: دبيّ,
துபாய்ய்) என்பது ஐக்கிய அரபு
அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது
பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும்
வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில்
அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே
அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக
மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து
இரண்டாவது நிலையில் உள்ளது[4]. துபாய் மற்றும் அபுதாபி
ஆகியவை மட்டுமே நடுவண் அரசின்
முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள
அமீரகங்கள் ஆகும்
துபாய்
மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த
வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது.
நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல்
போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி
பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில்
இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு
ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில
ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.





கருத்துகள் இல்லை: