அம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1!-

அம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1!- வீடியோ
2,95,680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி குடும்பம் ஆசியாவிலேயே பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 699 பில்லியன் டாலர்களாக உள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.