காக்கைகள் திடீர்னு வெள்ளையா மாறுது-செத்து செத்து விழுது- அஸ்ஸாமில் ஷாக் வீடியோ


அஸ்ஸாமில் காக்கைகள் திடீரென வெள்ளை நிறமாக மாறுவதும் சிறிது நேரத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக செத்து விழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஜதிங்கா என்ற இடத்துக்கு வந்து சேரும் பறவைகள் மர்மமான முறையில் கொத்து கொத்தாக செத்து விழுகின்றன. இது பறவைகளின் தற்கொலை பிரதேசமாக கூறப்படுகிறது

ஜதிங்காவில் மட்டுமே பறவைகள் செத்து விழுவதற்கான காரணம் குறித்து இன்னமும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அஸ்ஸாமில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.
சோனிட்பூர் மாவட்டம் போர்பாகியா கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் காகங்களின் கருப்பு நிறம் திடீரென மாறியிருக்கிறது. கருப்பு நிறம் ஆங்காங்கே வெள்ளை நிறமாகிக் கொண்டே இருந்திருக்கிறது.


இந்த நிறம் மாறிய நிலையில் காக்கைகளால் அதனைத் தொடர்ந்து பறக்க முடியாமல் போயிருக்கிறது. இதற்கு காரணம் நிறம் மாற மாற கண்பார்வையும் பறிபோயுள்ளது. இந்த நிறமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே காக்கைகள் கொத்து கொத்தாக செத்து விழுந்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.