ஜலதோஷத்தை விரைவில் குணமாக்கும் வழிகள்
ஜலதோஷத்தை விரைவில் குணமாக்கும்
வழிகள்
ஆயுர்வேதத்தில்
ஜலதோஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால்
விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன. இது
குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜலதோஷம் மருந்து சாப்பிட்டால்
ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப்
பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும்
என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜல தோஷத்துக்கென்று
உடனடி தீர்வு கிடையாது. ஜலதோஷம் உடலை சமநிலைக்குக்
கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே
உடல் சரியானால்தான் ஜலதோஷம் சரியாகும்.
பெயரிலேயே
இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த
நீர், மழை, குளிர் காற்று
ஆகிய காரணங்களால் ஜலதோஷம் உடனே
வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள்
ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன என்பது
வியப்பாக இருக்கும். ஜலதோஷம் இருப்பவர்கள்
தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள்
மீதும் படிந்து விடுகின்றன.
காற்றிலிருந்தோ
அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து
விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல
உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோஷம் சரியாகி விடும்.
ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும்.
ஆயுர்வேதத்தில் ஜலதோஷம் வராமலிருக்கவும்,
வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.
வீட்டில்
உள்ள பொருட்களை வைத்தே குணம் காணலாம்
* மஞ்சள்
தூளைத்தணலிலிட்டு, அதன் புகையை உறிஞ்சலாம்.
* சீரகம்
1 தேக்கரண்டியை 1 டம்ளர் தண்ணீரிலிட்டு கொதிக்க
வைத்து வடிகட்டி தினமும் 2 முறை அருந்தலாம். தொண்டை
கரகரப்பும் சேர்ந்திருந்தால் சுக்குப்பொடி சிறிது கொதிக்கும் நீரில்
சேர்க்கலாம்.
* 5, 6 மிளகினைத்தூள்
செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான
நீரில் போட்டு கலக்கி தேன்
சேர்த்து சில நாட்கள் இரவில்
குடிக்கலாம்.






கருத்துகள் இல்லை: