உங்களுடைய 5 ரகசியம் Google ளிடம் உள்ளது அது என்ன தெரியுமா?
உங்களுடைய 5 ரகசியம்
Google ளிடம் உள்ளது அது என்ன தெரியுமா?
கூகுள்
(Google) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு
பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித்
தொழினுட்பம், மேகக் கணிமை, இணைய
விளம்பரத் தொழினுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம்
செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன்
முதன்மையான சேவை ஆகும். 1998இல்
லாரி பேஜ், சேர்ஜி பிரின்
ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு
2004இல் நடைபெற்றது.
முழுமையாகப்
பயன்படும் வகையில் உலகின் தகவல்களை
ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்"
என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது
அமீது பட்டேல் என்ற கூகுள்
பொறியாளரின் கூற்றாகும்.
2006இல்
இந்நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவிற்கு தனது
தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.
உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான
தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில்
ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும்
இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள
தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.[3][4][5][6]
கூகுளின்
மிக விரைவான வளர்ச்சியினூடே பல
புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின்
முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன்,
கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள்,
கூகுள் பிளஸ், கூகுள் டாக்,
கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர்,
யூ ட்யூப் போன்ற பல்வேறு
சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
இணையத்தைப்
பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம்
நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட்
காமை உலகின் மிக அதிகமான
வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக
அடையாளப்படுத்தி உள்ளது.
கூகுள்
குரோம் என்னும் உலவியை கூகுள்
வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு
என்னும் கைப்பேசி இயக்கு மென்பொருள் அத்துறையில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன்
ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது.





கருத்துகள் இல்லை: