நாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா?- வீடியோ
அங்குலத்தில்
தொட்டாச்சு திரை கொண்ட மொபைல்
போன்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.
ஐ போன் எக்ஸ்
தொடங்கி, ரெட்மி மிக்ஸ், மோட்டோ,
சாம்சங் என ஹை-டெக்
தயாரிப்பு நிறுவனங்கள் முதல் லோ-குவாலிட்டி
நிறுவனங்கள் வரை அனைவரும் இதை
பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர்
நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிராண்ட்டின் தோற்றமும்,
இன்று நாம் பயன்படுத்தும் அதே
பிராண்ட் பொருட்களின் தோற்றமும் வெகுவாக மாறியுள்ளது. இதற்கு
காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி தான். மாடர்ன் என்ற
வார்த்தையே டெக்னாலஜியின் வளர்ச்சி தானே. இன்று, ஒரு
பொருளின் தரத்தை காட்டிலும் கவர்ச்சியை
தான் நாம் அதிகம் விரும்புகிறோம்.
நம் கையில் இருக்கும் மொபைலாகட்டும்,
நாம் உடுத்தும் உடையாகட்டும். ஏன் உள்ளாடையாகவே இருந்தாலும்
கூட, இரண்டு இன்ச் ஜீன்ஸ்
கீழே இறக்கி போடுவதன் காரணம்
என்ன, தான் அணியும் பிராண்டை
பகட்டாக காண்பித்துக் கொள்ளத்தானே.
இன்று
ஆஹோ, ஓஹோ என நாம்
வாய்பிளந்து காணும் உலகின் பல
முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் ஆரம்பக் காலக்கட்டத்தில் முதன்
முதலில் அவை சந்தைக்கு வந்த
போது எந்த தோற்றத்தில் இருந்தன
தெரியுமா? இதோ! கோல்கேட் பற்பொடி
டப்பா முதல், பார்பி டால்,
ஆணுறை, ஆப்பிள் கம்பியூட்டர், விண்டோஸ்
சாப்ட்வேர் என பலவற்றின் ஆரம்பக்
கால தோற்றம்...





கருத்துகள் இல்லை: