அட்மின்களுக்கு புதிய அதிகாரம்.. ஐஐயோ அம்மம்மா வாட்ஸ் ஆப் அப்டேட்!- வீடியோ


இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் அப்டேட்டில் குரூப் அட்மின்களுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது. குரூப்பில் இருக்கும் நபர்களின் செயல்பாட்டை அட்மீன்கள் இனி எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
ஏற்கனவே வாட்ஸ் ஆப் அப்டேட்டில் இன்னும் நிறைய வசதிகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. யூ டியூப் பார்க்கும் வசதி, குரூப் வீடியோ கால் வசதி என நிறைய வசதிகள் சேர்க்கப்பட இருக்கிறது.


இந்த புதிய குரூப் அட்மின் வசதி நிறைய பிரச்சனைகளை கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் புதிய அப்டேட் ஒன்றை இன்னும் சில நாளில் வெளியிட உள்ளது. அதன்படி வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்களுக்கு நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குருப்பில் யார் மெசேஜ் அனுப்ப முடியும், யார் அனுப்ப கூடாது என்பதை அட்மின்கள் முடிவு செய்ய முடியும். ஒருவர் குருப்பில் மெம்பராக இருந்தாலும் கூட அவரை மெசேஜ் செய்ய விடாமல் குருப் அட்மின் கட்டுப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.