அந்த காட்சியால் சூர்யாவின் 'டிஸ்கே'வுக்கு ஆளும்கட்சி எதிர்ப்பு தெரிவிக்குமோ?- வீடியோ

அந்த காட்சியால் சூர்யாவின் 'டிஸ்கே'வுக்கு ஆளும்கட்சி எதிர்ப்பு தெரிவிக்குமோ?- வீடியோ

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்திற்கு ஆளும்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்கிறார்கள் நெட்டிசன்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இந்த டீஸரை வெளியிடுமாறு சூர்யா ரசிகர்கள் கெஞ்சிக் கூத்தாடியது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஐடி ரெய்டுகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் டீஸரிலும் ரெய்டு நடப்பது போன்று காட்டியுள்ளனர். ஒரு காட்சியில் கீர்த்தி ஜெயலலிதா போன்று பச்சை நிற சேலை அணிந்து மேடையில் தோன்றுகிறார்.  
அம்மா தெய்வமாக இருந்து எங்களை ஆசிர்வதிக்கிறார் என்று அதிமுகவினர் கூறி வரும் நிலையில் கீர்த்திக்கு இப்படி ஒரு கெட்டப் போட்டுள்ளனர். இதனால் படத்திற்கு ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்கிறார்கள் நெட்டிசன்கள். மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் தமிழிசை மற்றும் ஹெச். ராஜா எதிர்ப்பு தெரிவித்து மக்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார்கள். அதனால் அதை பார்த்துவிட்டு ஆளும்கட்சி தானா சேர்ந்த கூட்டத்தை மன்னிக்கவும் வாய்ப்பு உள்ளதாம்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.