அட முட்டாள்களா, என் பெயர் நக்கத் கான் தான், இப்ப அதுக்கென்ன?: குஷ்பு பதிலடி- வீடியோ
அட முட்டாள்களா, என் பெயர் நக்கத்
கான் தான் என்று தன்னை
கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும்,
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. நடிகையும், காங்கிரஸ்
செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். அந்த
பெயரை அவர் மாற்றவே இல்லை.
இந்நிலையில் அண்மையில் சிலர் அவரின் இயற்பெயரை
கண்டுபிடித்து கிண்டல் செய்தார்கள். என்
பெயர் கான், நான் தீவிரவாதி
அல்ல என்று ஸ்டைலாக பதில்
கொடுத்தார் குஷ்பு.
இந்நிலையில் மீண்டும் பெயரை வைத்து அவரை
வம்பிழுத்துள்ளனர். கிண்டல்
செய்பவர்கள் சிலர் என் பெயர்
நக்கத் கான் என்று கண்டுபிடித்துள்ளனர்.
முட்டாள்களா அது தான் என்
பெற்றோர் எனக்கு வைத்த பெயர்.
ஆமாம், நான் ஒரு கான்...
இப்போ அதற்கு என்ன? விழித்துக்
கொள்ளுங்கள்...





கருத்துகள் இல்லை: