ரஜினியை சந்திக்க உடல் முழுவதும் ரஜினியின் உருவத்தை பதித்து வந்த ரசிகர்.

ரஜினிகாந்த், தனது ரசிகர்களை கடந்த மூன்று நாட்களாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாற்றி அவர்களோடு புகைப்படம் எடுத்து வருகிறார். அதன்படி இன்று, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அவர்கள் மத்தியில் பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் ரஜினி. ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் அவரைச் சந்தித்து வருகின்றனர். முகத்தில் ரஜினி உருவத்தை வரைந்த ரசிகர் ஒருவரும் ரஜினியை சந்தித்தார்.
ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்.
ரஜினியை சந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து ரஜினியோடு இன்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. 'மதுரை ரசிகர்களுக்கு கிடா விருந்து வைக்கத்தான் ஆசை; ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி' எனப் பேசியுள்ளார்.
இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரஜினி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரசிகர் ஒருவர் ரஜினியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் முகத்தில் 'காலா' ரஜினி உருவத்தை வரைந்திருந்தார். அவர் ரஜினி படங்கள் ப்ரின்ட் செய்யப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்.
நேற்றைய சந்திப்பில் ரஜினி குணா என்ற ரசிகர் ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியை சுற்றி சுற்றி வந்து வணங்கினார். 'போட்டோ முக்கியமில்லை.என் கடவுள்தான் முக்கியம்' எனக் கூறி கடவுளைக் கும்பிடுவது போல கையை உயர்த்தி ஆத்மார்த்தமாக வணங்கினார்.
வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க
Watch the video and don’t  forget share  to your friends  this video .please make a comment below. Like our page to see such videos

வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது..Source tamilfilmbeat

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.