சன்னி லியோன் படத்தில் அம்ரேஷ் கணேஷ் – கெட்ட ஆட்டம் ஆரம்பம்
சன்னி லியோன் படத்தில்
அம்ரேஷ் கணேஷ் – கெட்ட ஆட்டம் ஆரம்பம்
ஏற்கனவே
இசை அமைப்பாளர் அம்ரேஷ் கணேஷுக்கு நல்ல
பெயர் இருக்கிறது. யார் இவர் என்பவர்களுக்கு
சின்ன ரெஃப்ரஷ்மென்ட். முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன்தான்
அம்ரேஷ் கணேஷ், இவரை நடிகனாக்க
முயன்ற அம்மாவின் ஆசை தோல்வியில் முடிய,
அம்ரேஷே தனக்குப் பிடித்த இசையமைப்பு மூலம்
ஹிட்டானவர்.
‘மொட்ட
சிவா கெட்ட சிவா’ படத்தில்
‘ஹர ஹர மஹாதேவகி…’ என்கிற
கெட்ட பாடலை எழுதி இசையமைத்து
ஹிட்டாக்கியவர் இவரேதான். அதற்குப் பின் ‘பாஸ்கர் தி
ராஸ்கல்’, ‘யங் மங் சங்’,
‘கர்ஜனை ‘, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய
படங்களுக்கு இவர்
இசையமைத்து வருகிறார்.
இப்போது
சன்னி லியோன் நடிப்பில் வி.சி.வடிவுடையான் இயக்கவிருக்கும்
பிரமாண்டப் படத்துக்கு இசையமைக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே சன்னி
லியோனுக்கு ஒரு இமேஜ் உண்டு.
அதேபோல் அம்ரேஷ் கணேஷுக்கும்
ஒரு ‘நல்ல’ பெயர் உண்டு.
இப்போது
இவர்கள் இருவரும் இணைந்திருப்பதால் இவர்களின் இணைப்பு எத்தகைய ‘கெட்ட
ஆட்டத்தை’த் தரும் என்பதைச்
சொல்லத் தேவையில்லை..!






கருத்துகள் இல்லை: