கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் கோலிவுட்டில் மையம்... நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு
தமிழில்
உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை
சன்னி லியோன். இந்தப் படத்தை
வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
ஆபாசப் படங்கள் மூலம் உலகம்
முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது
ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில்
ஜெய் நடித்த 'வடகறி' படத்தில்
ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்
சன்னி லியோன். தமிழில்
உருவாகும் ஒரு சரித்திரப் படத்தில்
ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி
லியோன்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'பொட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார் பொன்ஸ் ஸ்டீபன்





கருத்துகள் இல்லை: