இந்திய வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கோஹ்லியின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்!- வீடியோ
இந்திய வீரர்களுக்கு
அடித்தது ஜாக்பாட்.. கோஹ்லியின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்!- வீடியோ
இந்திய
வீரர் கோஹ்லி தன்னுடைய சம்பளத்தை
உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை
விடுத்து இருந்தார். இதற்காக முறைப்படி பிசிசிஐ
கூட்டங்களில் கலந்து கொண்டார். மேலும்
அவர் தனக்கு மட்டும் இல்லாமல்
இந்திய அணியில் இருக்கும் மற்ற
வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கூறியிருந்தார். தற்போது இவரின் கோரிக்கை
பிசிசிஐ அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய
கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் பல மடங்கு
உயரும் என்று கூறப்படுகிறது.
இந்திய
கிரிக்கெட் அணியில் நான்குவிதமான சம்பள
முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. முதல்நிலை வீரர்களுக்கு இதில் மிகவும் அதிக
அளவில் சம்பளம் வழங்கப்படும். கோஹ்லி,
டோணி, அணியின் பயிற்சியாளர் ரவி
சாஸ்திரி ஆகியோரின் சம்பள விவரங்கள் சில
நாட்களுக்கு வெளியிடப்பட்டது. வருடத்திற்கு கோஹ்லி 1 மில்லியன் டாலரும், ரவி சாஸ்திரி 1.17 மில்லியன்
டாலரும் சம்பளமாக வாங்குகிறார்கள். டோணி 1.1 மில்லியனுக்கும் குறைவாக வாங்கி வருகிறார்.
அதேபோல்
மற்ற இரண்டாம் நிலை பிளேயர்களின் சம்பளம்
எவ்வளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எல்லோருக்கும்
ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும்,
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு
6 லட்சமும் வழங்கப்படுகிறது. அணியில் இடம் கிடைத்து
போட்டியில் விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு இதைவிட குறைவான சம்பளம்
வழங்கப்படுகிறது.
தற்போது
உலகில் உள்ள எல்லா அணி
வீரர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு
இருக்கிறது. இந்த நிலையில் கோஹ்லி
இதுகுறித்து பிசிசிஐ கூட்டத்தில் பேசினார்.
மேலும் இவருக்கு ஆதரவாக டோணி, ரவி
சாஸ்திரி ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டனர். முன்னாள்
வீரர்கள் கபில் தேவ், கங்குலி
ஆகியோரும் இவரின் கோரிக்கைக்கு ஆதரவு
தெரிவித்தனர். இந்திய அணியில் உள்ள
அனைத்து வீரர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி தரும்படி அந்த கூட்டத்தில் கோரிக்கை
வைக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை: