பிறந்து நான்கு நாள் ஆன பிஞ்சு குழந்தையை முட்புதரில் புதைத்த தந்தை.! கள்ளிப்பால் கொடுத்த பாட்டி..! கதறி துடித்த தாய்..! மதுரை சம்பவம்..!


மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெருவில் பெண் குழந்தை பிறந்து நான்கே நாட்களில் அக்குழந்தை இறந்ததாக கூறி புதைக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை தானாக இறக்கவில்லை எனவும் தந்தையும், பாட்டியும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்த ஜோடி தவமணி - சித்ரா தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா மீண்டும் (ஆண் குழந்தைக்காக)கர்ப்பமானார். இதனை அடுத்து கடந்த 10 ஆம் தேதி நான்காவதாக சித்ராவுக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது ஆனால் அதுவும் பெண்குழந்தை.
இதுவும் பெண் குழந்தை என்பதால் தவமணியும், அவரது தாயாரும் இணைந்து அந்த குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளன்னர். இதனை அடுத்து தாய்  சித்ரா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்ற அந்த கண  நேரத்தில் தவமணியும், அவரது தாயாரும் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்துள்ளனர்.
பின்பு தாய் சித்ரா திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அவர் கதறி துடிக்க, குழந்தை சிறிது நேரத்தில் கள்ளிப்பாலால் இறந்துவிட்டது. குழந்தை உடல்நல குறைவால் தான்  இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் இவர்கள் கூறிவிட்டு, குழந்தையை வீட்டின் அருகில் இருக்கும் முட்புதரில் புதைத்துள்ளனர்.
நான்கு நாட்களாக நன்றாக இருந்த குழந்தை திடீரென இறந்த உடன் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அந்த  கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுக்க, அதன் பின் ஆர்டிஓ முருகானந்தம் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் அதன் முடிவு குழந்தைக்கு விஷம் கொடுத்து தான் இறந்துள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கணவர் தவமணியும், அவரது தாய் பாண்டியம்மாளும் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டனர். பிறகு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த மிகப்பெரிய சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.