உங்கள் வாழ்க்கையில் தீராத து யரங்கள் தீர இப்படி விநாயகரை வழிபடுங்கள்


வீட்டில் விநாயகரை எப்படி வழிபடுவது, எளிமையான பரிகாரம் செய்வதால் வீட்டில் இருக்கும் தீராத துயர்  தீரும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம் வாங்க…

வாழ்க்கை என்றாலே பல பி ர ச்சினைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் நிறைந்தது தான். நாம் எப்படி வாழ்கின்றோம்  என்பதை வைத்து தான் ஒருவருக்கு பி ர ச்சினைகள் அதிகமாகவோ அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாகவோ இருக்கும். இதையும் தாண்டி தான் எப்படி சிக்கனமாக வாழ்ந்தாலும், எப்படி உழைத்தாலும் க ஷ்டம் தீராமல் துரத்துகிறது என்ற நிலை இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் விநாயகரை மிக எளிமையாக வழிபடுவதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இங்கு எப்படி விநாயகரை வழிபட்டால் து ன் பத்திலிருந்து விடுபடலாம் அதுவும் வீட்டிலிருந்தபடியே எப்படி வணங்குவது என்பதைப் பார்ப்போம். முதல் கடவுளான விநாயகர் வழிபாடு செய்துவிட்டு தான் மற்ற கடவுளை வழிபாடு செய்வது வழக்கம். அப்படிப்பட்ட விநாயகரை வழிபடுவதால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.


எளிய பரிகாரம்

திங்கட்கிழமை அன்று உங்கள் வீட்டையும், பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து, மறுநாள் (செவ்வாய்க் கிழமை) விநாயகர் பூஜை செய்ய தயாராக வேண்டும்.

இந்த பூஜை செய்ய தோரண கணபதி படம் வைத்து செய்தால் மிக சிறந்தது. செலவோடு செலவாக தோரண கணபதி புகைப்படத்தையும் வாங்கி பூஜை செய்ய பாருங்கள்.

சந்தன குங்குமம் பொட்டு வைத்து அலங்கரித்து பூஜை அறையில் வைத்து தோரண கணபதியை வணங்குங்கள்.

பூஜை செய்யும் போது தோரண கணபதிக்கு முன் ஒருநெய் விளக்கை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி மாவும், நாட்டு சர்க்கரை, 2 ஏலக்காய் பொடி செய்து அல்லது நசுக்கி கலந்த சுவையான நிவேதனத்தைப் படைக்க வேண்டும்.


இதே போல் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்து வர உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து துயரும் நீங்கும். கடன் நீங்கி செல்வம் பெருகும்.
விநாயாருக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை ஒரு பசு மாட்டிற்கு அல்லது, காக்கை குருவிக்கு அல்லது எறும்புகளுக்கு உணவாக்கி விடலாம்.

அதே போல் உங்கள் வீட்டில் தினமும் இரண்டு ஏலக்காய்களை நைவேத்தியமாக வைத்து விநாயகருக்குத் தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வர உங்கள் வீட்டிலும், உங்களை சுற்றி எ திர் வி னைகள் நீங்கும். நல்வாழ்வு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.