மஹத்தை அடித்த சிம்பு
மஹத்தை
அடித்த சிம்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்
2 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் மஹத்
வெளியேறினார். வீட்டிலிருந்து வெளியே வரும்போது நடிகர்
சிம்புவுக்கு நன்றிகளை தெரிவித்தார் மஹத்.
இந்நிலையில் நடிகர்
சிம்பு கன்னத்தில் அறைவது போல வீடியோ
ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு மூன்று
முறை மஹத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மூன்றாவது முறை
சற்று வேகமாக அடி விழுந்தது.
விடியோவில்
இன்னொருவர் பின் இருந்து மஹத்தின்
கைகளை பின்னால் பிடித்துக் கொண்டிருக்கிறார். 'உனக்கு எவ்வளவு அடிச்சாலும்
வலிக்காது.. ஏன்னா அவ்வளவு அடி
நீ உள்ளுக்குள்ள வாங்கி இருக்க' என்று
மஹத்தை பார்த்து சிம்பு கூறுகிறார்.
பின்னர்
இருவரும் கட்டிப் பிடித்து தங்கள்
அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது இந்த வீடியோ
சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி கொண்டிருக்கிறது





கருத்துகள் இல்லை: