ஓவியாவாக முயற்சிக்கும் அபிராமி….ஓவியா ஷட்-அப் பண்ணுங்க….அபிராமி எங்கிட்ட பேசாத…!
ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மீரா மிதுனின் வருகையைத் தொடர்ந்து சண்டை சச்சரவாக மாறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசன் கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில், 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து ஒளிபரப்பான முதல் நாளில் ஒரே கலகலப்பாக இருந்தது. தொடர்ந்து நேற்று நடந்த 2ம் நாளில் ஆளாளுக்கு அலட்டிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதில், முதலில் இருப்பது அபிராமி. 2ஆவது சாக்ஷி. 3ஆவது ஷெரின்…இவர்களுடன் கூட்டணியில் இருப்பது கவின், ரேஷ்மா என்றே கூறலாம்.
முதலில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் 16ஆவது போட்டியாளராக அறிமுகமான மீரா மிதுனின் வருகையைத் தொடர்ந்து சண்டை சச்சரவு கொண்ட வீடாக மாறத் தொடங்கியது. இதற்கு முழு காரணமாக இருந்தது அபிராமி, சாக்ஷி கூட்டணியை சொல்லலாம். ஏற்கனவே இவர்களுக்கு இடையில், ஏதோ பிரச்சனை இருப்பது போன்று காட்டிக் கொண்டுள்ளனர். ஒருவேளை பொறாமையா இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது





கருத்துகள் இல்லை: